திண்டுக்கல்: பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே கோட்டூர் ஆவாரம்பட்டியில், வீட்டுப் பாதை பிரச்சனை காரணமாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் விஜயா என்ற பெண்ணை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து விஜயா அளித்த புகாரின் பேரில், தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் மற்றும் சார்பு ஆய்வாளர் சூரியகலா ஆகியோர் விசாரணை நடத்தி, பன்னீர்செல்வத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி