டி. கூடலூர் திண்டுக்கல் ரோட்டில், கரும்பாறை பட்டி பிரிவு அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த டூவீலர், ரோட்டோர மின்கம்பத்தின் மீது பலமாக மோதியது. இதில் வாகனத்தின் முன்னாள் உட்கார்ந்து வந்த அவரது மகள் யோகனா சம்பவ இடத்திலேயே இறந்தார். இவர் அரசு பள்ளியில் 4 - ம் வகுப்பு படித்து வந்தார். டூ வீலரை ஓட்டி வந்த சின்னத்துரை மற்றும் மற்றொரு மகள் காயம் அடைந்தனர். உடன் வந்த மேலும் ஒருவர் காயம் இன்றி தப்பினர். இந்த விபத்து குறித்து குஜிலியம்பாறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அஜித்குமாருக்கு உலகின் முதல் ஸ்பெஷல் காரை பரிசாக அளித்த மஹிந்திரா