திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், கஞ்சா விற்பனை செய்ததாக இளையராஜா (40) மற்றும் அவரது மனைவி நாகலட்சுமி (30) ஆகியோரை வேடசந்தூர் போலீசார் கைது செய்தனர். கொல்லம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது, DSP பவித்ராவுக்கு கிடைத்த தகவலின் பேரில், சார்பு ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையிலான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் அவர்களை கைது செய்து, 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.