எரியோடு: 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையம் ஆய்வு

தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 28.03.2025 அன்று தொடங்கி 15.04.2025 வரை நடைபெறவுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளைச் சார்ந்த 10,838 மாணவ, மாணவிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சார்ந்த 9,761 மாணவ, மாணவிகள் மற்றும் தனியார் பள்ளிகளைச் சார்ந்த 4,523 மாணவ, மாணவியர்கள் என 12,599 மாணவர்கள் மற்றும் 12,523 மாணவிகள் என மொத்தம் 25,122 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இதில், திண்டுக்கல் கல்வி மாவட்ட அளவில் 65 தேர்வு மையங்களில் 15,953 மாணவ, மாணவியர்கள், பழனி கல்வி மாவட்ட அளவில் 47 தேர்வு மையங்களில் 9,169 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

 மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை இணைந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை சிறப்பாக நடத்திட அனைத்து வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, வட்டாட்சியர் சுல்தான் சிக்கந்தர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி