திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தரமற்ற சிகிச்சை; பரபரப்பு புகார் (VIDEO)

திண்டுக்கல் அருகே வேல்வார்கோட்டையை சேர்ந்தவர் அலி அக்பர். இவருடைய மனைவி ஜன்னத் நிஷா. இவருடைய மகன் சையது ஆஷிக். கடந்த மார்ச் மாதம் மூன்றாம் தேதி ஜன்னத் நிஷா உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்து விட்டார். இந்த நிலையில் அலி அக்பருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரத்தக்குழாயில் அடைப்பு இருக்கிறது. 

அதை சரிசெய்ய தந்தையின் உடல்நிலை சரியில்லை. அதனால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைத்து பாருங்கள் என்று அங்கிருந்து அனுப்பி வைத்தார்கள். வீட்டிற்கு வந்து தனது தந்தைக்கு வடமதுரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வெட்டப்பட்ட விரல்களில் புழுக்கள் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த மகன், தமிழக அரசு கட்டிடம் சேவைகள் வசதிகள் எல்லாமே சிறப்பாக இருந்தும், ஆனால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முறையாக பதில் அளிப்பதில்லை என்று பாதிக்கப்பட்டவரின் மகன் பேட்டி அளித்தார். மேலும் முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்தி, மருத்துவமனையில் தனது தந்தை மட்டுமல்லாமல் பல்வேறு நோயாளிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர் என்று மனம் நொந்து பேசியது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

தொடர்புடைய செய்தி