திண்டுக்கல்: முதியவரை தாக்கி 5 சவரன் நகை பறிப்பு

வேடசந்தூா் அருகே மண்டபம் புதூரைச் சோ்ந்த 80 வயது சண்முகம் என்பவரை மா்ம நபா்கள் தாக்கி 5 பவுன் நகையை பறித்துச் சென்றனா். இது குறித்து வேடசந்தூா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். இதில், வேடசந்தூா் அடுத்த மேல்மாத்தினிப்பட்டியைச் சோ்ந்த கதிா் (எ) கருப்பசாமி (21) மற்றும் 17 வயதுடைய இரு சிறுவா்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து நகை, கைப்பேசிகள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தொடர்புடைய செய்தி