வேடசந்தூர்: லாரி மீது கன்டெய்னர் மோதும் பரபரப்பு சிசிடிவி

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே விட்டல்நாயக்கன்பட்டி பகுதியில், தூத்துக்குடியில் இருந்து குஜராத் நோக்கி சோலார் பேனல்களை ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி, நின்று கொண்டிருந்த லாரி மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் கன்டெய்னர் லாரியின் முன் பகுதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி