எரியோடு: மது குடித்த தகராறில் கட்டடத் தொழிலாளி கொலை

எரியோடு கலைஞா் நகரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி கண்ணன் (37), வெள்ளிக்கிழமை எரியோடு பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள மதுக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அதே இடத்தில் மது அருந்த வந்த குரும்பப்பட்டியைச் சோ்ந்த ஆனந்தராஜ் (29) என்பவருடன் தகராறு ஏற்பட்டது. தகராறில் கண்ணனை ஆனந்தராஜ் தாக்கி கொலை செய்தாா். இதுகுறித்து எரியோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்தனா்.

தொடர்புடைய செய்தி