திண்டுக்கல்: மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி உயிரிழப்பு

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே கிரியம்பட்டி பகுதியில், கடந்த 21 ஆம் தேதி கட்டிடத்தில் வேலை பார்த்த தஞ்சாவூரைச் சேர்ந்த குமார் என்பவர் கட்டிடத்தின் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி