ஆந்திரா, குஜராத் மத்திய படைகள் வருகை

திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து துணை கமாண்டர் ராதா தலைமையில் 76 பேர் கொண்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படை மார்ச் 10 அன்று வந்துள்ளது. மேலும், குஜராத் மாநிலத்தில் இருந்து 93 பேர் கொண்ட மற்றொரு படை நேற்று வந்துள்ளது. இவர்கள் ஓட்டுச்சாவடிகள், முக்கிய சந்திப்புகள் மற்றும் எல்லை சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி