திண்டுக்கல், வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் பெண்களுக்கென்று தனி வார்டு உள்ளது. நேற்று (அக் 4) நள்ளிரவு நேரத்தில் வந்த மர்ம நபர் புளியம்பட்டியைச் சேர்ந்த தனம், வேடசந்தூரைச் சேர்ந்த தங்கமணி ஆகிய இருவரின் விலை உயர்ந்த செல்போன்களை திருடிச் சென்றுள்ளார். மேற்படி சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில் இது குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.