திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடமதுரை கொம்பேறிபட்டியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் (26) என்பவர், நிதி நிறுவனத்தில் 47 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக புகார் அளித்தும், மிரட்டப்படுவதாகவும் கூறி, தனது குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.