திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே மோர்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நல்லாண்டவர் (37), நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே பனைமரத்தில் நுங்கு பறிக்க ஏறினார். அப்போது மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.