சரத்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி தனது தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார். அதன்படி நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்து சரத்குமார் தனது தந்தை மற்றும் சகோதரியை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார். பின்னர் சரத்குமாரை வீட்டில் வைத்து பூட்டி விட்டு மறுநாள் காலையில் வந்து பார்த்ததாகவும் அப்போது தனது மகன் இறந்து கிடந்ததாக வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது சரத்குமாரின் பின் தலையில் பலத்த ரத்தக்காயம் இருந்தது. அப்போது வீட்டுக்குள் அடைத்ததால் மேற்கூரை வழியாக தப்பிக்க முயன்றதாகவும், அப்போது தலையில் அடி பட்டு இறந்து விட்டார் என்றும் ஆறுமுகம் தெரிவித்தார்.
இதனையடுத்து சரத்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் சரத்குமார் அடித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. உடனே அவரை கைது செய்தனர்.