திண்டுக்கல் புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக புறநகர் டிஎஸ்பி. சிபிசாய் சௌந்தர்யன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தாடிக்கொம்பு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிரபாகரன் தலைமையிலான தனிப்படையினர் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழனிரோடு கொத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கணேசன், சாந்தி, சக்திவேல் ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் 3 பேர் மீது பல்வேறு கஞ்சா வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.