திண்டுக்கல்லில் பெண்கள் மிரட்டப்பட்டு நகை, பணம் கொள்ளை

திண்டுக்கல், கொத்தனார் சந்தில் வீட்டில் இருந்த இரண்டு பெண்களை மர்ம நபர்கள் மிரட்டி, துன்புறுத்தி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில், சார்பு ஆய்வாளர்கள் சூரியகலா, பிரபாகரன் மற்றும் எஸ்பி. தனிப்படையினர், நகர் குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி