திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் நிதிகுமார் தலைமையில் நடைபெற்ற வாகன சோதனையில், கஞ்சா வைத்திருந்ததாக புவனேஷ் (19) மற்றும் ராஜேஷ் (21) ஆகிய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.