வடமதுரை அருகே மகளை கடத்திய தாய் உட்பட 2 பேர் கைது

வடமதுரை பகுதியைச் சேர்ந்த மதுமிதா(19) மற்றும் பெருமாள்(23) காதல் திருமணம் செய்து பாதுகாப்பு கேட்டு வேடசந்தூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இருவரும் மேஜர் என்பதால் போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மதுமிதாவின் தாய் லட்சுமி(38) மற்றும் உறவினர்கள் காரை வழிமறித்து பெருமாளை தாக்கி, மதுமிதாவை காரில் கடத்திச் சென்றனர். தகவலறிந்த போலீசார் விரட்டிச் சென்று தாய் லட்சுமி உட்பட இருவரைக் கைது செய்து, மேலும் 4 பேரைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி