திண்டுக்கல்: பைக் மீது டிராக்டர் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு

கொடைக்கானல் அருகேயுள்ள பட்டியக்காடு பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (30) மற்றும் சிவகாசியைச் சேர்ந்த மருதுபாண்டி (27) ஆகிய இருவரும் தனியார் தோட்டத்தில் வேலை செய்து வந்தனர். புதன்கிழமை மதியம் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த டிராக்டர் மோதியதில் பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மருதுபாண்டி பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொடைக்கானல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி