திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய நடிகர் யோகி பாபு இன்று (பிப்ரவரி 19) வருகை தந்தார். ரோப்கார் மூலம் மலைக்கோயிலுக்கு சென்ற யோகி பாபு கூட்டநெரிசலில் மாட்டிக்கொண்டார். யோகி பாபு வந்தது அறிந்த பக்தர்கள் சூழ்ந்துகொண்டு செல்ஃபி எடுக்க முயன்றனர். உடனடியாக கோயில் பாதுகாவலர்கள் யோகி பாபுவை கூட்டநெரிசலிலிருந்து மீட்டு சாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்றனர்.