பழனியை அடுத்த சின்ன கலையம்புத்தூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 57). கூலித்தொழிலாளி. இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்காக சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மனமுடைந்த ரவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.