பழனி அருகே ரயிலில் அடிபட்டு பெண் பலி

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே வெள்ளிக்கிழமை அன்று மேட்டுப்பாளையத்திலிருந்து தூத்துக்குடி சென்ற ரயில் கோதைமங்கலம் பகுதியில் வந்தபோது, 60 வயது மதிக்கத்தக்க பெண் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்த பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து பழனி ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி