பழனி வரதமாநதி அணையில் பச்சை நிறமாக மாறிய தண்ணீர்

பழனி அருகே உள்ள வரதமாநதி, பாலாறு-பொருந்தலாறு, குதிரையாறு அணைகள் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுகின்றன. போதிய மழை இல்லாததால் இந்த ஆண்டு அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து, நீர்மட்டமும் சரிந்துள்ளது. குறிப்பாக, வரதமாநதி அணையில் தண்ணீர் பச்சை நிறமாக மாறி பாசி படர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குடிநீராக பயன்படுத்தும் தண்ணீரை சுத்திகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி