திண்டுக்கல்: குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த இபிஎஸ்

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். மலையடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலம் மலைக் கோயிலுக்கு கோயில் அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். மாலையில் ராஜ அலங்காரத்தில் தண்டாயுதபாணி சாமியை எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் எடப்பாடி பழனிசாமிக்கு பிரசாதங்கள் வழங்கி சிறப்பு செய்தது.

தொடர்புடைய செய்தி