பழனியில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய இளைஞர்.. வீடியோ

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கோதைமங்கலம் ரயில்வே கேட் அருகே இரவு நேரத்தில் பட்டாகத்தியை கையில் வைத்து இளைஞர் சுற்றித் திரிந்துள்ளான். அந்த, இளைஞர் கத்தியுடன் இருப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். வீடியோவை பார்த்த பழனி தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து, கத்தியுடன் சுற்றிய, இளைஞர் கோகுல் ராஜை கைது செய்தனர். மேலும், பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி