பழனி பேருந்து நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், பெண்ணிடம் கைப்பேசியை திருடியதாக இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விருதுநகர் மாவட்டம் சோமசுந்தரம் (45) மற்றும் திருச்சி மாவட்டம் கணேஷ்குமார் (33) என தெரியவந்தது. இவர்கள் இருவரும் பெண்ணிடம் கைப்பேசியைத் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.