தாதநாயக்கன்பட்டி அருகே கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் (40) என்ற விவசாயி, கொழுமம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு ஆர். ஆர். மில் அருகே நிகழ்ந்துள்ளது. பலத்த காயமடைந்த அவரை கோவை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.