கோடை விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானல் நகரில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை காண பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வருகை தந்ததால், வத்தலகுண்டு பிரதான சாலை, செண்பகனூர், வெள்ளி நீர்வீழ்ச்சி, மூஞ்சிக்கல், ஏரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலை குறுகல் மற்றும் ஆக்கிரமிப்புகள் காரணமாக வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.