கொடைக்கானல் அருகே கூக்கால் ஊராட்சி பழம்புத்தூரைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் என்பவரின் வீட்டருகே கட்டியிருந்த குதிரையை நள்ளிரவில் புலி தாக்கி கொன்றது. வனத்துறையினர் கால் தடங்களை ஆய்வு செய்து புலி வந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால், இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.