பழனி: ரேஷன்கடைகளில் கோதுமை தட்டுப்பாடு இல்லை.. அமைச்சர்

பழனியில் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று கலந்து கொண்டார். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்களிடம் செய்தியாளர்கள் ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வருவதாக தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு இல்லை. மூன்று மாதத்திற்கு தேவையான கோதுமை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை கிடங்கில் உள்ளது. 

ஒரு சில கடைகளில் கோதுமை கிடைக்கவில்லை என்ற புகார் வந்தவுடன் உடனடியாக ரேஷன் கடைகளுக்கு கோதுமை அனுப்பி வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் அதிகாரிகளுடன் நடந்த ஆய்வு கூட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருள் விரைவாக செல்வதை உறுதி செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வீட்டிற்கு ரேஷன் பொருட்கள் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் தற்போதைக்கு திட்டம் செயல்படுத்த வாய்ப்பில்லை எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனை பெற்று வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி