இந்நிலையில் இன்று பங்குனி உத்திர திருவிழா நான்காம் நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலப் பாதையில் தீர்த்த காவடிகளை எடுத்து வந்து குவிந்து வருகின்றனர். மேலும் படிப்பாதை, யானை பாதையில் பக்தர்கள் சென்று வருகின்றனர். மின் இழுவை ரயில், ரோப் கார் நிலையங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்று சுமார் மூன்று மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று இரவு தங்கமயில் வாகனத்தில் முருகபெருமான் வலம் வந்த காட்சி தருவார். மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
நிலநடுக்கத்தில் காப்பாற்றிய ராணுவ வீரரை மணந்த சிறுமி!