கொடைக்கானல் பெருமாள்மலை அருகே உள்ள வனப்பகுதியில் திடீரென காட்டுத் தீ பரவி வருகிறது. இந்த தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதிக்குள் தீ பரவாமல் தடுக்கவும், தீ தடுப்பு கோடுகள் அமைக்கவும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த தீ விபத்து வன உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.