பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் 23 கட்டணமில்லா சேவைகளுக்காக, ரூ. 117 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கைக்குழந்தைகளுக்கு காய்ச்சிய பால், இலவச திருமணம், காலணி பாதுகாப்பகம் உள்ளிட்ட சேவைகளுக்கு மொத்தம் ரூ. 117 கோடியே 72 லட்சத்து 40 ஆயிரத்து 913 செலவாகியுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான பக்தர்கள் பயனடைந்துள்ளனர் என, தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.