கொடைகும்பக்கரை அருவிக்கு ரோப் கார் திட்டம்: அதிகாரிகள் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், வட்டக்கானல் - கும்பக்கரை அருவி இடையே 8 கி.மீ. தூரத்திற்கு ரோப் கார் அமைக்கும் திட்டம் குறித்து சென்னை மெட்ரோ நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சுற்றுலா மற்றும் வருவாய் துறை அதிகாரிகளும் இந்த ஆய்வில் பங்கேற்றனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கொடைக்கானல் - பழநி ரோப் கார் திட்டம் மற்றும் ஹெலிபேடு திட்டம் போல இதுவும் அறிவிப்போடு நின்றுவிடாமல், மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி