தமிழக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு, சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் மற்றும் காலமுறை ஊதியம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் போராட்டம் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பழனி தாலுகா அலுவலகம் முன்பு சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து அமர்ந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.