பழனி அருகே குடிநீர் குழாய் சீரமைக்க கோரிக்கை

பழனி காரமடை அருகே மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் தொடர்ந்து வீணாக வெளியேறி வருகிறது. இதனால் சாலையில் சேறும் சகதியும் ஏற்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. உடனடியாக குழாயை பழுது நீக்கி தண்ணீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி