திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு வருகை தந்த உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பொங்கல் தொகுப்பு வழங்கும் காலம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. எத்தனை சதவீதம் பேர் பொங்கல் தொகுப்பு பெற்றுள்ளார்கள் என்பதைப் பார்த்துவிட்டு, முதலமைச்சர் உத்தரவைப் பெற்று பொங்கல் தொகுப்பு பெறுவதற்கான கால நீட்டிப்பு செய்யப்படலாம் என அமைச்சர் சக்கரபாணி செய்தியாளரிடம் தெரிவித்தார்.