திண்டுக்கல்: ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெளியூர்களில் தங்கி வேலை செய்பவர்கள் பஸ், ரெயில்கள் மூலம் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் ரெயில், பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கூட்டநெரிசலை பயன்படுத்தி பயணிகளிடம் திருட்டு, நகை பறிப்பு உள்ளிட்ட. சம்பவத்தில் திருடர்கள் ஈடுபடுகின்றனர். இதனால் மக்கள் அதிகம் கூடும் கடைவீதிகள், பஸ், ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு
வருகின்றனர். இதேபோல் ரெயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதையும் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல், பழனி ரெயில் நிலையங்களில் ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரெயில் நிலையம் மற்றும் பழனி, திண்டுக்கல் வழியாக செல்லும் ரெயில்களில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அப்போது எளிதில் தீப்பற்றும் பொருட்கள், வெடிக்கக்கூடிய பட்டாசுகளை கொண்டு செல்கிறார்களா? என்று பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்தனர். மேலும் பட்டாசு உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்று பய ணிகளிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி