கஞ்சா விற்ற இருவர் கைது: பழனியில் பரபரப்பு

பழனி சண்முகபுரம் பகுதியில் நகர் காவல் நிலைய போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, உழவர்சந்தை பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்ற முகமத் சக்கரியா (26), மனோஜ்குமார் (18) ஆகியோரை பிடித்து சோதனையிட்டனர். அவர்களிடம் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து, இருவரையும் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி