மாணவிகளின் பாதுகாப்பு நலன் கருதி காலையிலும் மாலையிலும் அந்தப் பகுதியில் போலீசார் பாதுகாப்பு வழங்குமாறு அந்தப் பள்ளியின் மேலாண்மைக்குழு நிர்வாகிகள் டிஎஸ்பி தனஜெயமிடம் மனுவை வழங்கி பாதுகாப்பு கேட்டனர்.
மேலும் கடந்த வருடம் தொடர்ந்து அந்தப் பகுதியில் போலீசார் பாதுகாப்பு வழங்கியதைப் போன்று இந்த ஆண்டும் வழங்க வேண்டும் எனக் கூறி நிர்வாகிகள் டிஎஸ்பி மற்றும் காவல் துறையினருக்கு மேலாண்மைக்குழு நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் நன்றியை தெரிவித்தனர்.