பேருந்து நிலையத்தில் முகம் சுழிக்கும் பயணிகள்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பக்தர்கள் வசதிக்காக பழைய பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இங்கு பேருந்துகள் நுழையும் இரு நுழைவு வாயில்களில், இரு புறங்களிலும் ஒரு சில பயணிகள் சிறுநீர் கழித்து விட்டு செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. அதனால் நகராட்சி நிர்வாகம் பேருந்து நிலையம் நுழைவாயில் பகுதியில் தூய்மை பணியை மேற்கொண்டு, சிறுநீர் கழிக்க கூடாது என்று பதாகை வைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி