பழனி: திருட்டில் ஈடுபட்ட வாலிபருக்கு தர்ம அடி

பழனி கோட்டைமேட்டு தெருவில் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் மர்ம நபர்கள் புகுந்து பொருட்களை திருடுவதும், வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடுவதுமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் இன்று இளைஞர் ஒருவர் வீடு புகுந்து இருசக்கர வாகனத்தை திருட முயற்சி செய்துள்ளார். அதனைப் பார்த்த பொதுமக்கள் திருடனை விரட்டி பிடித்து அடித்து துவைத்தனர். பிடிபட்ட நபர் சோதனை செய்த போது கத்தி இருந்தது தெரியவந்தது. 

உடனடியாக பழனி நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடனை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பிடிபட்ட நபர் திண்டுக்கல் கொடைரோடு பகுதியைச் சேர்ந்த துரை என்பதும், ஏற்கனவே பல இடங்களில் திருடி போலீசாரிடம் பிடிபட்டு சிறைக்குச் சென்று வந்தவர் என்பது தெரியவந்தது. திருட வந்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி