பழனி லட்சுமிபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த கீதா (25) வீட்டின் முன் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தார். வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்துள்ளனர். கீதாவை யார், எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.