பழனி பெரியப்பா நகர் பகுதியில் நகராட்சி நகர்நல அலுவலர் மனோஜ்குமார், நகரமைப்பு அலுவலர் புவனேஸ் ஆகியோர் தக்காளி மார்க்கெட் பகுதியை பார்வையிட சென்றனர். அப்போது அங்குள்ள வியாபாரிகள் சிலர், மார்க்கெட்டில் குடிநீர், கழிப்பறை என அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். அப்போது இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.