திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில் பக்தர்கள் காணிக்கையாக ரூ. 2 கோடியே 70 லட்சத்து 28 ஆயிரத்து 250 ரொக்கம், 889 வெளிநாட்டு கரன்சி, 342 கிராம் தங்கம், 8833 கிராம் வெள்ளி கிடைத்தது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் கல்லுாரி மாணவர்கள் மற்றும் கோயில் அலுவலர்கள் ஈடுபட்டனர். துணை ஆணையர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.