திண்டுக்கல்: பழனி, மாட்டுப்பாதை அருகே காளிப்பட்டியில் விவசாயி ரவி என்பவர் தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து வைத்திருந்த 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை 4 வெறி நாய்கள் கடித்து குதறியது. இதில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியானன. 15-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடின. அவைகளை மருத்துவரிடம் ரவி அழைத்துச் சென்றார்.