பழனி: சாரை பாம்புகள் பின்னிப்பிணைந்து நடனம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா, பாறைப்பட்டி அருகே தம்மனங்குளம் பகுதியில் மஞ்சள் சாரை பாம்பு மற்றும் கருஞ்சாரை பாம்பு இரண்டும் பின்னிப்பிணைந்து வெகு நேரம் நடனம் ஆடினது. இதனை அப்பகுதியில் ஒருவர் தனது செல்போனில் மறைந்திருந்து நேற்று(செப்.2) வீடியோ எடுத்துள்ளார். தற்போது இந்த பாம்பின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி