திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் ரோப்கார் சோதனை துவங்கியது. அறிவியல் தொழிலக ஆய்வு மைய கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி பொறியாளர்கள் 4 பேர் வந்து, காந்தம், வேதியியல் பொருட்களை கொண்டு வெல்டிங் இணைப்பு உறுதி தன்மையை சோதனை செய்தனர். இந்த சோதனை இன்று நிறைவு பெற உள்ளது. நாளை (நவம்பர்-15) முதல் ரோப்கார் வழக்கம் போல் இயங்கும்.