பழனி: ரேஷன் கடை ஊழியர் சஸ்பெண்ட்

பழனி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அய்யப்பன், தனது ரேஷன் அட்டையை முன்னுரிமை அட்டையாக மாற்ற விண்ணப்பித்திருந்தார். பல மாதங்களாக மாற்றம் செய்யப்படாத நிலையில், வழங்கல் அலுவலகத்தில் கேட்டபோது கடந்த ஆண்டே மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 35 கிலோ அரிசிக்கு பதிலாக 16 கிலோ மட்டுமே வழங்கப்பட்டதாக அய்யப்பன் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், ரேஷன் கடை ஊழியர் நெப்போலியன் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஊழியர் நெப்போலியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி