பழனி ரயில்வே மேம்பாலம் பணி போக்குவரத்து பாதிப்பு

பழனி - தாராபுரம் சாலையில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், வாகனங்கள் மாற்றுப் பாதையான கவுண்டர் இட்டேரி சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இந்த சாலை குறுகலாக இருப்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போக்குவரத்தை சீரமைக்க காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி